மாணவி ஷயணாவின் ஓவியம் வெளிநாட்டவரால் தெரிவு செய்யப்பட்டது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவனமும் இணைந்து நடாத்தும் கிழக்கின் ஓவியத்திருவிழா கடந்த 21, 22, 23 ஆம் திகதிகளில் சிறப்பாக இடம் பெற்றது.

குறித்த ஓவிய திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து அர்த்தம் புரிந்து கொள்ள கூடிய வகையில் பல உயிரோட்டம் உள்ள ஓவியங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஓவிய திருவிழாவில் (கண்காட்சி) இளம் ஓவியராக கலந்து கொண்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவி ரவிகுமார் ஷயணா (ஊறணி மட்டக்களப்பு) சிறப்பான பல ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தார்.

இதன் போது ஜேர்மனிய நாட்டவர்களால் பண்டைய எமது முன்னோர்களின் செயற்பாட்டடை விளக்கும் (குடத்தில் நீர் எடுத்துச் செல்லும் பெண்கள்) ஓவியமானது தெரவிவு  செய்யப்பட்டு விற்பனையாகியது.
 

No comments: