08 தங்கப்பதக்கங்களுடன் 12 பதக்கங்களை வென்றது தாண்டியடி விக்னேஸ்வரா மாகாவித்தியாலயம்
நடந்து முடிவுற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் (பாடசாலைகளுக்கிடையிலான) போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தாண்டியடி விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் 08 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளதாக பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் லவகேஸ்வரன் குறிப்பிட்டார்.
08 தங்கப்பதக்கம் 03 வெள்ளிப்பதக்கம் 01 வெண்கலப்பதக்கம் உள்ளிட்ட 12 பதக்கங்களை தன்வசப்படுத்தியுள்ளது தாண்டியடி விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்.
மேலும் நடந்து முடிவுற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் திருக்கோவில் வலயம் 02 இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
No comments: