கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சரிவு.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் : இப்றா லெப்பை முஹம்மது றிபாஸ் தெரிவித்தார்.
கடந்த வருடத்தின் இறுதியில் கல்முனை பிராந்தியத்தில் 9,154 ( ஒன்பதாயிரத்து நூற்று ஐம்பத்தி நான்கு) பேர் டெங்கு நேயாளர்களாக இனங்காணப் பட்டிருந்ததாகவும் இன்று இதுவரையில் 1,368 ( ஆயிரத்து முன்னூற்றி அறுபத்தி எட்டு) பேர் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளநிலையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் குறைவாக இனங்காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் டெங்கு களப்பணியில் ஈடுபடும் தற்காலிக உத்தியோகத்தர்கள் தம்மை நிரந்தரப்படுத்தக்கோரி மேற்கொண்டுள்ள பணிபகிஷ்கரிப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.
பிரதேச செயலகம் , பிரதேச சபை , பாடசாலைகள் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தற்காலிக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார்,அனைத்து பிரதேச சுகாதார நிலையங்களின் பொது சுகாதார பரிசேதகர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தினை ஒன்றிணைந்த செயற்பாடாக முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த 2023.07.12 ம் திகதி நிறைவடந்த அட்டவணை பிரகாரம் இதுவரையில் 29 டெங்கு நோயாளர்கள் மாத்திரம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் எல்லைக்குள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந் நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் தற்காலிக டெங்கு கள உத்தியோகத்தர்களாக பணியாற்றுபவர்கள் தம்மை நிரந்தர நியமனம் செய்யகோரி 04 (நான்காவது நாளாகவும்) தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: