பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் உயிரிழப்பு! கைதான இராணுவ வீரர்
கண்டி - அலவத்துகொடை பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (11) 25 வயதுடைய பெண்ணொருவரின் சடலம், வீட்டுக்கு அருகிலுள்ள வயல் பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து கிராம மக்களால்மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 38 வயதுடைய முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்ததால் சிகிச்சைக்கு பின் தற்போது இராணுவத்தில் சாதாரண கடமைகளில் பணிபுரிவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: