ஆசிரியர் விடுதலை முன்னணி நாளைய போராட்டத்துக்கு பூரண ஆதரவு



நாடளாவிய ரீதியாக நாளை (15) இடம்பெறுகின்ற தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆசிரியர் விடுதலை முன்னணி பூரண ஆதரவை வழங்குவதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகளையும் வரிச் சுமைகளையும்,விலைவாசி உயர்வையும்,கட்டணங்களின் அதிகரிப்புகளையும் எதிர்த்து நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாளை நடத்துகின்ற ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஆசிரியர் விடுதலை முன்னணியும் இணைந்து கொள்கின்றது என்றார்.


No comments: