அம்பிளாந்துறை நீரோடையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நபர்மட்டக்களப்பு - அம்பிளாந்துறை வில்லுக்குளம் பிரதேசத்தில் நீரோடையில் தவறி விழுந்து நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஆர்.கே.எம்.பாடசாலை வீதி கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ரீ.கவிசாந் என்பவராக இனங்காணப்பட்டுள்ளார்.

நபர் தனது சொந்த வேலையின் பொருட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை நோக்கி சென்று பின் தங்களது வேலைகளை முடித்து விட்டு அம்பிளாந்துறை வில்லுக்குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அந்த நீர் நிரம்பிய குழியில் விழுந்து காப்பாற்றப்பட்டு மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments: