எல்ல நகரில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எல்ல நகரில் பொதுக் மலசலகூடம், குடிநீர்க் குழாய் அமைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட இலங்கை மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

முறையான கழிவுநீர் அமைப்பு இல்லாத காரணத்தால், வடிகாலில் வியாபாரிகளை கழிவுகளை விடுவிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கழிப்பறையின்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.




No comments: