வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் உயிரியளவியல்  (Bio metrics)   தரவுகளை பெற்றுக் கொள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளன.

இது ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிரியளவியல் (Bio metrics) என்பது மனிதர்களின் உடல் அல்லது நடத்தை சார்ந்த உள்ளார்ந்த தனிப்பட்ட கூறுபாட்டைத் தனித்துவமான முறையில் அடையாளம் காண்பதற்கான அளவீடுகளும் கணக்கீடுகளும் சார்ந்த அறிவியல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: