கல்முனையில் ஜனாஸா பிரிவு அங்குரார்பணம்

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை "யங் பேர்ட்ஸ்" விளையாட்டு கழகத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஜனாஸா பிரிவு அங்குரார்பண நிகழ்வு

கல்முனை "யங் பேர்ட்ஸ்" விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.முஹம்மது மர்சூக் தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஆரம்ப அங்குரார்பண நிகழ்வு எதிர்வரும் 11.03.2023 (சனிக்கிழமை) கல்முனை கடற்கரை வீதி, மீனவர் சங்க காரியாலயத்திற்கு அருகாமையில் சிறப்பாக இடம்பெற உள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாஸா நலன்புரி சேவைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விளையாட்டு கழகத்தின் கௌரவ உறுப்பினர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் முன் வந்து தந்து உதவியுள்ளனர்.

கல்முனை பிரதேசத்தில் மிக நீண்ட கால தேவையாக இருந்த கல்முனைக்கான ஜனாஸா நலன்புரி சேவைகள் "யங் பேர்ட்ஸ்" விளையாட்டு கழகத்தின் ஜனாஸா பிரிவின் மூலமாக நிறைவேற உள்ளதுடன் தொடர்ந்து இச் சேவையை கழகத்தின் ஜனாஸா பிரிவு முன்கொண்டு செல்லும் என்பதை கல்முனை பிரதேச வாழ் மக்களுக்கு கல்முனை "யங் பேட்ர்ஸ்" விளையாட்டு
கழகத்தின் ஜனாஸா பிரிவு தெரிவித்துள்ளது.No comments: