விவசாய அமைச்சின் எச்சரிக்கை

நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் சேதன பசளை மற்றும் சேதன பசளை மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் அவை தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் அண்மையில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சேதன பசளை தொடர்பில் நெல் விவசாயிகளின் அணுகுமுறை நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் உரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளும் அதற்கு காரணமாக காணப்பட்டது. இதன்படி, இந்த வருடம் சேதன பசளை மற்றும் சேதன பசளை மானியத்தை நெல் விவசாயிகள் மறுத்தால், பெரும்போகத்தில் அவற்றை தேயிலை மற்றும் மரக்கறி செய்கைகளுக்கு வழங்குமாறு விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


No comments: