அம்பாறை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மிதிவெடி

இன்று (14) காலை கடற்கரைப்பகுதில் புதையுண்ட நிலையில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த மிதிவெடி மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: