நாட்டில் எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகள் அறிமுகம்?

எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளன.

அமைச்சரவையில் அரச மற்றும் தனியார் துறையும் இணைந்து குறித்த திட்டத்தை முன்வைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போக்குவரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முதற்கட்டமாக பரீட்சார்த்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளன.
 

No comments: