மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் 22 வயது நபர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் புதூரைச் சேர்ந்த 22 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை 172 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை (08) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சுற்றுச் கூழல் பாதுகப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சந்திமால் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சும்பவதினமான நேற்று கருவப்பங்கேணி பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வியாபாரத்துக்காக கஞ்சாவை எடுத்துச் சென்ற 22 வயது இளைஞனை மடக்கிபிடித்ததுடன் அவனிடிருந்து 172 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
No comments: