LAUGFS சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
LAUGFS சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் LAUGFS சமையல் எரிவாயு விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதியவிலையாக ஐயாயிரத்து 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 2 ஆயிரத்து 112 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, புதிய விலையாக 845 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments: