மட்டக்களப்பு வவுணதீவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை இரு இளைஞர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளைபோட்டமடு ஆற்றிபகுதியில் கசிப்பு உற்பத்திய நிலையத்தை நேற்று புதன்கிழமை (22) இரவு முற்றுகையிட்ட பொலிசார் இரு இளைஞர்களை கைது செய்ததுன் அவர்களிடமிருந்து 33ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார்; தெரிவித்தனர்

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில்லுக்கொடியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 22,23 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் து 33ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்களை மீட்டதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.No comments: