குருணாகல் மாநகர சபையின் புதிய மேயராக அருண் சாந்த

குருணாகல் மாநகர சபையின் புதிய மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் சுமேத அருண ஷாந்த மேலதிக வாக்குகளால் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன சரிசமனான ஆசனங்களை வென்றமையால், திருவூலச்சீட்டினூடாக நகர மேயராக துஷார சஞ்ஜீவ தெரிவு செய்யப்பட்டார்.

இந்த ஆண்டுக்கான மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிப்பட்டமையால், அதற்கமைய, புதிய மேயருக்கான வாக்களிப்பு இன்று நடத்தப்பட்டது. இதில் சுமேத அருண ஷாந்த மேலதிக வாக்குகளால் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.No comments: