ரயிலில் மோதி உயிரிழந்த நபர்நேற்று (20) இரவு கொழும்பு - கண்டி கிரிவல்லபிட்டிய பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய நபரே உயிரிழந்தவர் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கேகாலை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\No comments: