ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர முயற்சி - பந்துல குணவர்தன

நாட்டிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ​நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிகாட்டிகளுக்கு அமைவாகவே நாட்டின் அரச நிறுவாகம் இடம்பெறுகிறது.

 இதற்கு அப்பால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், நாடு இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அரசாங்கம் சர்வதேச் உடன்படிக்கைகளுக்கு மதிப்பளித்து அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.No comments: