நாட்டில் மீண்டும் நீண்டநேர மின்தடைஇலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறையால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபை எச்சரித்துள்ளது.நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்தில் மின்சார சபை 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் வேலை செய்வதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.

தற்போது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 100 பேர் மட்டுமே வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.No comments: