மட்டக்களப்பில் ஆலய உண்டியலை திருடிய நபர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு கொக்;குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன ஊறணி பேச்சியமன் ஆலைய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து நப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்த சட்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சின்ன ஊறணி பேச்சியமன் ஆலையத்தில் சம்பவதினமான சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கோயிலில் சத்தம் கோட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பகுதி மக்களை ஒன்றினைத்து கோயிலை சுற்றிவளைத்தபோது அங்கிருந்த உண்டியழல கல்லால் உடைக்க முயற்சித்தபோது அவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து நப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் அந்த பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் எனவும் இவருக்கு பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர் எனவும் இவரை ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.No comments: