யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு பேரணியின் இறுதி நாள் இன்று

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்திஇ யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி முன்னெடுக்கப்படும் பேரணியின் இறுதி நாள் இன்றாகும்.

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு வரை நான்கு நாட்களுக்கு இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது

குறித்த பேரணி, மூன்றாம் நாளான நேற்றைய தினம் முல்லைத்தீவு முதல் திருகோணமலை வரை முன்னெடுக்கப்பட்டது

இந்தநிலையில் இந்த பேரணி இறுதி நாளான இன்றையதினம் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு வரை முன்னெடுக்கப்படவுள்ளது

இதற்கிடையில் இன்றைய பேரணியில் கலந்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments: