சரண குணவர்தனவிற்க்கு இன்று பிணை

 


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) பிணை வழங்கியுள்ளது.

இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது அரசாங்க வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை (13,680,000) மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

01.08.2006 முதல் 2007 ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட சரண குணவர்தனவிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதுடன், அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: