இன்று முதல் மின் வெட்டு இல்லை - கஞ்சன விஜயசேகர

இன்று (16) முதல் நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் அங்கீகாரத்துடன், நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.No comments: