மரண தண்டனை பற்றிய ஆவணத்தில் கையொப்பம் இடமாட்டேன் - ஜனாதிபதி
இலங்கையில் எந்தவொரு நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு விதிக்கின்ற மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே இதனை தெரிவித்திருந்தார்.
No comments: