உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுபோதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் சம்பளம் தொடர்பான சிக்கல் இதற்கு காரணமாக உள்ளதால் இன்று(22) ஆரம்பிக்க இருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பளம் அதிகரிப்பது தொடர்பாக  அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
 தெரிவித்துள்ளார்


No comments: