திருக்கோவில் பகுதியில் வெள்ள அனர்த்தம், பிரதேச செயலாளர் களத்தில்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பருவப் பெயர்ச்சி மழை காணமாக  ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் கரையோரப்பகுதி பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


அந்த வகையில், திருக்கோவில் பிரதேச செயலாளர் பகுதியில் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் வெள்ளநீரை வடிந்தோடச் செய்யும் ஆயத்த நடவடிக்கைகள் இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் பகுதியில் இடம் பெற்றது.


இதன் போது தமது பிரதேசத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் விஜயம்  மேற் கொண்டதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களது நிலை தொடர்பிலும் ஆராய்ந்தார்.


இது தொடர்பில் எமது செய்தி சேவை வினவியபோது கருத்து தெரிவித்த திருக்கோவில் பிரதேச செயலாளர். தமது எல்லைக்குட்டபட்ட திருக்கோவில் பகுதியில் 07 கிராம சேவகர் பிரிவு வெள்ள நீரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தம்பிலுவில் 01, கிழக்கு 

தம்பிலுவில் 01, மேற்கு

விநாயகபுரம் 01,02,03,04 மற்றும் திருக்கோவில் 04 ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 1500ற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாவும் குறிப்பிட்டார்.

அத்ததுடன் வெள்ள நீரை வெளியேற்ற இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தம்பிலுவில் பெரியமுகத்துவாரம்,  விநாயபுரம் கேரைக்களப்பு மற்றும் திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ளநீர் வழிந்தோடும் நீரோடைகள் என்பன இன்று இராணுவத்தினர் 242வது (படையணி) மற்றும் விவசாயிகள், மீனவர்களின் உதவியுடன் அகழ்ந்து விடப்பட்டதாகவும்  வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.


No comments: