படகு மூழ்கி ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் சடலமாக மீட்பு


 

கொக்கட்டிச்சோலை - தாந்த்மாலை பகுதியில் உள்ள குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குளானதில் காணமல் போன மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் ஆவார்கள்.

 இவர்கள் கொக்கட்டிசோலை தாந்நதாமலை பகுதியில் உள்ள குளத்தில் பயணித்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானார்கள். 

ஆசிரியர் உயிரிழந்திருந்ததுடன், மூன்று மாணவர்களும் காணமல் போயிருந்தனர் காணமல் போன மாணவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் இணைந்து காவல்துறை மேற்கொண்ட தேடுதல் பணியில் மூன்று மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

No comments: