நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 (அந்துவன்)

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெறப்பட்ட கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது எனவும், வருமான வரியை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் கோரியும் அட்டன் பிரதேசத்திலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் தொழிற்சங்க பேதமின்றி அட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .

(09) காலை முதல் தபால் நிலைய ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்தும், கறுப்புக் கொடிகளால் தபால் நிலைய வளாகத்தை அலங்கரித்தும் தபால் நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.No comments: