சம்மாந்துறையில் யானை தாக்கி விவசாயி பலி

ஐ.எல்.எம் நாஸிம்

யானைக்காவலுக்காக சம்மாந்துறை பெரிய கொக்கனாரை வட்டை பகுதிக்கு சென்ற மூன்று நபர்களை இன்று (24) அதிகாலை யானை தாக்கியுள்ளது.

யானை தாக்கியதில் ஒரு நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்ததோடு இருவர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யானை தாக்குதலுக்கு 55 வயதுடைய மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தர்ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது. 

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.No comments: