மம்மியின் உண்மை தன்மையை அம்பலப்படுத்திய ஜப்பான் விஞ்ஞானிகள்

 


ஜப்பானில் உயிர்காக்கும் கடவுள் என வழிபடப்படும் மம்மியின் உண்மைத் தன்மையை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மனித முகத்தை ஒத்த தோற்றத்துடனும் மீன் வாலை ஒத்த கால் பகுதியிடனும் இந்த மம்மி 1736-1741 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் ஜப்பானிய தீவான ஷிகோகுவுக்கு அருகில் பசுபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மம்மி தற்போது அசாகுச்சி நகரிலுள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மம்மி மீன் பாகங்களால் அலங்கரிக்கப்பட்ட துணி, காகிதம், பருத்தி ஆகியவற்றால் புனையப்பட்டுள்ளதாக தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மம்மியை அந்நாட்டு மக்கள் உயிர்காக்கும் கடவுளாக வணங்கி வருகின்றனர். மேலும், கொவிட் 19 தொற்றுக் காலப்பகுதியில் பெரும்பாலான மக்களால் வணங்கப்பட்டது.

மம்மியின் மேல் பாகம் குரங்கு போலும் கீழ் பாகம் மீன்போல காட்சியளித்தாலும் அது பாலூட்டியல்லவென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உட்புற எலும்புக்கூடு எதுவும் கண்டறியப்படவில்லை. கழுத்தின் பின்புறம் மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் உலோக ஊசிகள் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.No comments: