அம்பாறையில் அன்று கப்பல் இன்று படகு - (பா.உ )இரா.சாணக்கியன்

கழுத்தில் போடும் துண்டை தூக்கு கயிறுகளாக போடும் நிலையில் தமிழரசு கட்சியை தவிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஏனையஅனைத்து கட்சிகளது நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான ஆலையடிவேம்பு பிரதேச சபை வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டபோது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும் தமிழ் அரசு கட்சியானது தமிழர்களுக்கான அரசாக திகழ்கின்றதாகவும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நேற்றைய 75ஆவது சுதந்திர தினத்தினை கரிநாளாக, தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்பட்ட நாளாக அறிவித்து தமிழரசு கட்சி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்த அறவழி போராட்டம் சிறந்த உதாரணமாகும் என குறிப்பிட்டார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளை பிரிக்க கார் வாடகைக்கு எடுப்பது. போன்று கப்பலை வாடகைக்கு எடுத்து ஒருவர் வந்திருந்தார் அப்படி  வந்தவர் இன்று எங்கு இருக்கின்றார் என்று கூட தெரியாத நிலை இப்போது காணப்படுகின்து.

இவர் தமிழ் மக்களது வாக்கை பிரிக்கபோகின்றார் என்பதை அறிந்து நாங்கள் எவ்வளவு போராடியும் மக்களை மாற்ற முடியவில்லை அதன் தாக்கத்தினை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் இது மக்கள் தங்களது உரிமையினை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைகின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தலைமைகள் , முன்னாள், இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றி தமது அரசியல் லாபத்திற்காக உரிமை , தமிழினம் என்று கோஷம் போடுகின்றார்கள் என  தெற்கு அரசியல் வாதிகள் கூறுகின்றனர்.

ஆனால் நாம் இங்கு போராடுவது போராட்டங்கள் நடத்தி எமது பலத்தினை நிரூபிப்பது மக்களுக்காகவும் எமது தமிழ் மக்கள் இருப்பை தக்க வைப்பதற்காக மாத்திரமே என்பதை மக்கள் உணர வேண்டும்.

அன்று அம்பாறையில் அன்று கப்பலில் வந்து தமிழ் மக்களது வாக்குகளை பிரித்ததைப் போன்று இம்முறை கப்பலுக்கு பதிலாக படகில் மக்களை பிரிக்க ஒரு பிரிவினர் தயாராகி வருகின்றனர்.

அதே போன்று அன்று அம்பாறையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல் இம்முறை மட்டக்களப்பில் வாடகைக்கு எடுத்து ஒருவர் வந்திருக்கின்றார் உள்ளூராட்சி சபை தேர்தலில்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறையில் வாக்கு பிடித்ததை போல  நாங்கள் மட்டக்களப்பில் வாக்குகளை பிரிக்க இம்முறை விட மாட்டோம்

எனவே தமிழர்களது இருப்பை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்த செயற்பாட்டை  இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் எமது தமிழ் மக்கள் செய்ய மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.No comments: