தபால் சங்க ஊழியர்கள் கறுப்பு அஞ்சல் போராட்டத்தில்
இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களிலும் கறுப்பு அஞ்சல் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டமானது இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் கறுப்பு அஞ்சல் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வங்கி வட்டி விகிதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: