புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுபிடிப்பு

புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள உடையார்வாவியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று 05 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் புத்தளம் பழைய மன்னார் வீதியில் வசிக்கும் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த நபர் புத்தளத்தில் உள்ள இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிபவர் என்பதுடன் இவர் கடந்த  மூன்றாம் திகதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந் நிலையில் வாவி ஒன்றிற்கு அருகில் குறித்த நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது 

குறித்த நபர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.No comments: