வசந்த முதலிகே விடுதலை - மேன்முறையீடு செய்ய பொலிஸார் கோரிக்கை

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் வசந்த குமார முதலிகே, நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments: