தனமல்விலவில் கஞ்சா தோட்டம் முற்றுகை- 8,410 கஞ்சா செடிகள் அழிப்பு

 


தனமல்வில பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் இன்று (19) முற்றுகையிட்டனர்.

இதன்போது, 8,410 கஞ்சா செடிகளை அழித்ததுடன் சந்தேகநபர்களிடம் இருந்த உள்நாட்டு கைத்துப்பாக்கி ஒன்றையும் மீட்டு தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments: