அம்பாறையில் கஞ்சா தோட்டம் முற்றுகை 7 ஆயிரத்து 500 கஞ்சா செடி அழிப்பு

(கனகராசா சரவணன்)

அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள பக்மிட்டியாவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர் செய்கை செய்யப்பட்ட பகுதியை விசேட அதிரடிப்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (03) முற்றுகையிட்டு பயிரட்பட்டிருந்த 7 ஆயிரத்து 500 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாகதமண பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் அறுகம்பை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த காட்டுப் பகுதியை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 3 தொடக்கம் 6 அடி வரையிலான உயரமுடைய 7 ஆயிரத்து 500 கஞ்சா செடி பயிடப்பட்டிருந்ததை பிடுங்கி எடுத்து தீயிட்டு எரித்து அழித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தமண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.No comments: