கொள்ளையடிக்கப்பட்ட ரஷ்ய சுற்றுலா பயணியின் 600 டொலர்

ஹிக்கடுவை வெவல பிரதேசத்தில் விடுதி ஒன்றில் ரஷ்ய சுற்றுலா பயணி தங்கியிருந்த அறையில் பெட்டியிலிருந்து 600 டொலர் பணத்தை நபர் ஒருவர் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் எல்லா இடத்திற்கும் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று(20) இரவு திரும்பி வந்த போது பணம் காணாமல் போயுள்ளது எனஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பணம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் இதனால் சுற்றுலா துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் திருட்டு தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
 


No comments: