இரத்தினபுரியில் பஸ் விபத்து- 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

 


பலாபத்தல பகுதியிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த இ.போ.சபையின் இரத்தினபுரி டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸொன்று இன்று (10) இந்துருவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிற்பகல் 01.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த அனைவரும் கிளிமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பிற்பகல் 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 45 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் இந்த பஸ் குருவிட்ட-எரட்ன சிறிபா பாதையில் சேவையில் ஈடுபடும் பஸ் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களின் வசதிக்காக இந்த நாட்களில் விசேட சேவையாக இது ஈடுபடுத்தப்படுகிறது.

இந்துருவ பகுதியில் உள்ள வளைவில் பஸ் சுமார் 30 அடி சாய்வில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்ஸில் பயணித்தவர்களில் சிவனொளிபாதமலைக்கு சென்றவர்களும்இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: