இலங்கை அணியின் உரிமத்தை இடைநிறுத்தியது FIFA.

 இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) FIFA வினால் ஜனவரி 21, 2023 முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்துத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தில் இருந்து இலங்கை அதிகாரிகள் விலகியதால், FFSL தொடர்பான விஷயங்களில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இதன் விளைவாக, இடைநீக்கம் நீக்கப்படும் வரை FFSL பிரதிநிதி மற்றும் கிளப் அணிகளுக்கு இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உரிமை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: