தேர்தல் ஆணைக்குழுவுக்கு சலுகைகள் இல்லை, கையவிரித்த ceypetco
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போதைக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தேவையான அளவு எரிபொருளை வழங்க முடியாமல், தேர்தல் ஆணைக்குழு திணறி வருகிறது
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு.முஹம்மட் உவைஸ், அதிகளவு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் பணம் இல்லை எனவும், அதனால் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதற்கும் அனுமதி வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments: