CEB க்கு எதிராக சட்ட நடவடிக்கை??

 நடந்து கொண்டிருக்கும் 2022  உயர்தரப் பரீட்சைகளின் காலப்பகுதியில் எந்தவொரு மின் வெட்டுக்களையும் அங்கீகரிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.  

இலங்கை மின்சார சபைக்கு (CEB) அனுப்பிய கடிதத்தில், PUCSL மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மின் வெட்டுக்கள் அங்கீகரிக்காது என்று தெரிவித்துள்ளது.  

இன்று (27) மின் வெட்டுக்களை அமல்படுத்துமாறு CEB ஆல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய PUCSL, 2023 ஜனவரி 26 முதல் 2023 பிப்ரவரி 17 வரை மின் வெட்டுக்களை அங்கீகரிக்காது என்று தெரிவித்துள்ளது.  

 PUCSL 2023 பெப்ரவரி 17 வரை தடையில்லா மின்சாரம் வழங்குமாறு CEB க்கு அறிவுறுத்தியுள்ளது, இந்த காலகட்டத்தில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.


 

No comments: