CEB-Ceypetco பெரும் நெருக்கடியில்..கடன் வழங்க அரச வங்கிகள் மறுப்பு.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரண்டுக்கும் அரச வங்கிகள் கடன் வழங்க மறுத்ததனால்  இரண்டு நிறுவனங்களும் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.


 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10,800 கோடி ரூபா (108 பில்லியன்) கடனை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை ஏற்கனவே  அறிவித்துள்ளது.

 நிலுவைத் தொகையை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உடனடியாக வழங்காவிட்டால், பெறறோலிய் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய பணமில்லாமல் வீழ்ச்சியடைய நேரிடும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவ பணிப்பாளர் திரு.சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.  

 மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மின்சார சபைக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு மின்சார அதிகார சபை கடமைப்பட்டிருந்தாலும், நிலுவையில் உள்ள கடன் தொகையை செலுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுக்காவிட்டால், எரிபொருளை கொள்வனவு செய்து சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தக் கடன் தொகையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா என ஆணைக்குழுவின் தலைவர் நளிந்த இளங்ககோனிடம் வினவியபோது, ​​மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் அது தொடர்பான கடனைத் தீர்க்க முடியாது எனத் தெரிவித்தார்.  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்காவிட்டால், தினசரி மின்வெட்டை மேலும் சில மணிநேரங்களுக்கு அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 இரண்டு அரச வங்கிகளும் கடன் வழங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இலங்கை மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 நன்றி:-ஷிரான் ரணசிங்க. 




 

No comments: