நெஷனல் சுபர் லீக் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்.
இலங்கையின் பிரபலமான உள்ளூர் கிரிக்கட் லீக் தொடரான "நெஷனல் சுபர் லீக்" கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடர் நாளை 19ம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய அணியின் மற்றும் உள்ளூர் கழக அணிகளின் வீரர்களை கொழும்பு, கண்டி, யாழ், காலி, தம்புள்ளை என்று இலங்கையின் பிரபலமான நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகளாக பிரித்து இலங்கையின் முன்னணி கிரிக்கட் மைதானங்களிலேயே இந்தப் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.
போட்டிகள் இலங்கை கிரிக்கட்டின் உத்தியோகபூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: