உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு. - ஆணைக்குழுவின் தலைவர்.-

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க தற்போது இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பே, அடுத்தது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமும்  வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும், புதிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டாலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.No comments: