வரிக் கொள்கைக்கு எதிராக நுவரெலியாவில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்.

(க.கிஷாந்தன்)

தற்போதைய அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா வங்கி ஊழியர் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்து நுவரெலியா நகரின் மையப் பகுதியிலுள்ள பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் நேற்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கத்தினால் கடந்த (23) ஆரம்பிக்கப்பட்ட கறுப்பு வாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வங்கி ஊழியர் சங்கத்தினர் கறுப்பு உடை அணிந்து காணப்பட்டனர்.No comments: