செல்வந்த நாடுகளின் நட்புறவை ஏற்படுத்தி எமது உள்ளுராட்சி அமைப்பை பலப்படுத்துவேன். - சஜித்-

பணக்கார நாடுகளின் உள்ளுராட்சிகளுடன் இணைந்து இந்த நாட்டில் உள்ளூராட்சிகளை பலப்படுத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 உலக பணக்கார நாடுகளின் உள்ளூராட்சி அமைப்புகளுடன் நட்புறவு என்ற கருத்தை உருவாக்கி, அதன் மூலம் நமது நாட்டு உள்ளூராட்சி அமைப்புகளுக்கு பணம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 அதற்கான பணிகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் மூலம் இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு வருமானம் கிடைக்குமெனவும் தெரிவித்தார்.


 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்து வைக்கும் குருநாகாலயில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.No comments: