அனைத்து ஆணைக்குழுக்களுக்கும் புதிய பிரதிநிதிகள்.. சூடி பிடித்தது அரசியலமைப்பு சபை..

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய அரசியலமைப்பு சபை மிகவும் சூடுபிடித்துள்ளது.

 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இந்த சூடான நிலைமை ஏற்பட்டுள்ளது.

 தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் புதியவர்களை நியமிப்பதற்கான அறிவித்தல்களை வெளியிடுவது பொருத்தமற்றது என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.  தேர்தல் ஆணைக்குழு தவிர்ந்த ஏனைய ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 அதற்குப் பதிலளித்த சபாநாயகர் உள்ளிட்ட தரப்பினர், அறிவித்தல்கள் வெளியிடப்பட்டாலும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும், இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்

 இதன்படி, அனைத்து ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்காக வர்த்தமானி அறிவித்தல் அறிவித்தல்களை வெளியிடுவதற்கு அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.No comments: