தேங்காய் விலை சடுதியாக உயர்வு

சந்தையில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு தேங்காய் 130 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் தென்னை அறுவடையில் வீழ்ச்சி காணப்படுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலை பெப்ரவரி இறுதி வரை தொடரும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

 இந்த ஆண்டு 3300 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.



No comments: