வரிச்சுமைக்கு எதிராக தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பில்.

அரசாங்கம் கொண்டு வந்துள்ள வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.


 அரச வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கலந்துரையாடலின் பின்னர் தமது தீர்மானங்களை அறிவிப்பார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


 இதேவேளை, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களுக்கு எதிராக கொழும்பு துறைமுக ஊழியர்கள் மதிய உணவு நேரத்தின் போது முன்னெடுக்கும் போராட்டம் ஆரம்பித்தது. 


 

 இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு புதிய வரிக் கொள்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்து வெளியிட்டார்.


 வரி திருத்தங்களினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சர்கள் பலருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.





No comments: