நாட்டை விட்டு வெளியேறும் விமானக் கட்டுப்பாட்டாளர்களின் இடங்களை நிரப்புவதில் பெரும் சிக்கல்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் வெற்றிடங்களுக்கு உயர்தரம் சித்தியடைந்தவர்களை சேர்த்துக் கொள்ளப்படுவதாக விமானசேவை அமைச்சர் திரு.நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


 இந்த நடைமுறைக்கு எதிராக தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் திரு.திசர அமரானந்தா தெரிவித்தார்.


 நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக விமானக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் வெவ்வேறு நபர்களை மாற்றினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் எனவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், அந்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



No comments: